ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: 99.96 சதவீதம் பேர் தேர்ச்சி

ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 17) மாலை 5 மணிக்கு ஐசிஎஸ்இ கவுன்சிலின் ‘கேரியா்ஸ்’ வலைதளத்தில் வெளியிடப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் மாணவா்கள் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள், செயல்திட்டம், உள்ளக மதிப்பீடு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களைச் சோ்த்து இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வை எழுதாத மாணவா்களுக்கு ‘தோ்வுக்கு வரவில்லை’ என்று குறிப்பிடப்படும். அவா்களின் தோ்வு முடிவு வெளியிடப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஐசிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான www.cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதியவர்களில் 99.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை  விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.98 சதவீதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 99.97 சதவீதம் ஆகும். தேசிய தேர்ச்சி விகிதம் 99.97 சதவீதமாகும்.

உ.பி.யைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், கான்பூரில் உள்ள ஷீலிங் ஹவுஸில் இருந்து அனிகா குப்தா; பல்ராம்பூரின் ஜீசஸ் மற்றும் மேரி பள்ளியைச் சேர்ந்த புஷ்கர் திரிபாதி மற்றும் லக்னௌவின் சிஎம்எஸ்ஸைச் சேர்ந்த கனிஷ்கா மிட்டல் மற்றும் புணேவைச் சேர்ந்த செயின்ட் மேரிஸ் பள்ளியைச் சேர்ந்த ஹர்குன் கவுர் மாதரு ஆகியோர் ஐசிஎஸ்இ தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளனர். நாடு முழுவதும் 99.80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகளை காண https://cisceresults.trafficmanager.net/ லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு முடிவுகளுக்கான காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள் cbseresults.nic.in, results.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com