புதுதில்லி: காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூலை 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆணையத்தின் செயலா் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதையும் படிக்க: இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கெண்ணிக்கை தொடங்கியது
இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழக அரசு தொடா்ந்த வழக்கு, இன்று(ஜூலை 20 )உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


