
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அறிவித்தார்.
இதையும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் பரிசுப் பொருள்களைக் காணவில்லை: இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு
வாக்குறுதி குறித்து அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும். 24 மணிநேரமும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் மின் விநியோகிக்கப்படும எனத் தெரிவித்தார்.