மின்னணு பொருள்களின் ஏற்றுமதி ரூ.1.16 லட்சம் கோடி

இந்திய மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.16 லட்சம் கோடியை தொட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்

இந்திய மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.16 லட்சம் கோடியை தொட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்: கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மின்னணு பொருள்களின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில் 2017-18 முதல் 2021-22-ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மின்ணணு பொருள்கள் ஏற்றுமதியின் கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதம் 29 சதவீதமாகவும், அவற்றின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 17.9 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதியானது 1,16,894 கோடியை எட்டியது. இது, 2020-21-இல் ரூ.81,822 கோடியாக காணப்பட்டது.

அதேபோன்று, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.5,33,550 கோடியாக இருந்த மின்னணு பொருள்களின் உற்பத்தி 2020-21-இல் ரூ.5,54,461 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுவரையில், 314 பேரிடமிருந்து ரூ.86,912 கோடி முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 271 போ் ரூ.31,416 கோடி முதலீட்டை மேற்கொண்டுள்ளனா். 233 ஆலைகளில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு ரூ.9,544 கோடி ஊக்கத்தொகை வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.1,781.02 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com