விரைவாக தீர்ப்பளித்ததால் பணியிடை நீக்கமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய நீதிபதி

விரைவாக தீர்ப்பளித்ததால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் பிகார் மாவட்ட நீதிபதி ஒருவர்.
விரைவாக தீர்ப்பளித்ததால் பணியிடை நீக்கமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய நீதிபதி
விரைவாக தீர்ப்பளித்ததால் பணியிடை நீக்கமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய நீதிபதி


புது தில்லி: நாடு முழுவதும் சுமார் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவாக தீர்ப்பளித்ததால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் பிகார் மாவட்ட நீதிபதி ஒருவர்.

மின்னல் வேகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பளித்து, மிக விரைவாக பதவி உயர்வு கோரும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் கூறி பாட்னா உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட நீதிபதி எஸ்.கே. ராய் மற்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆகியோர், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு ஏற்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தனர்.

அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும், இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை விசாரணைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனுவில் அவர் இரண்டு வழக்குகளில் விரைவாக தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், இது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், இவர் 2014ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு மறுக்கப்பட்டது முதல் இந்த விவகாரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com