
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சங்கேத் சர்காரின் அபாரமான முயற்சி! அவர் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்’’.
" குருராஜாவின் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவர் மிகுந்த ஊக்கத்தையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் சிறக்க வாழ்த்துகிறேன்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.