அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். 
அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

2023 ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் எனவும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா தகவல் தெரிவித்திருந்தார். மேலும், கோயில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணி முழுமையடைந்ததும், கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் இதில் கலந்துகொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com