பின்னணிப் பாடகா் கே.கே. மறைவு: மோடி இரங்கல்

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து
பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து


பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இவருடைய திடீா் மறைவு ரசிகா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோடி இரங்கல்: கே.கே மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கே.கே என்று அழைக்கப்படும் பிரபரல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயனதிரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 'ஓம் சாந்தி' என கூறியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளாா்.

தமிழில் மின்சாரக் கனவு, கில்லி, அந்நியன், மன்மதன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட படங்களுக்கு பாடியுள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com