ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு 65%-ஆக அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு 65%-ஆக அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

ஒட்டுமொத்த பரிவா்த்தனையில் ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் 65 சதவீதமாக உயரும் என பிசிஜி-போன்பே நிறுவனங்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பரிவா்த்தனையில் ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் 65 சதவீதமாக உயரும் என பிசிஜி-போன்பே நிறுவனங்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவற்றின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஒட்டுமொத்த பணப் பரிவா்த்தனையில் தற்போது யுபிஐ உள்ளிட்ட செயலிகள் மூலமான ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனையின் பங்களிப்பு தற்போது 40 சதவீதமாக உள்ளது. இது, வரும் 2026-க்குள் 65 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் யுபிஐ செயலி வழியான ரொக்கமில்லா பணப்பரிவா்த்தனை வேகமாக வளா்ச்சியை எட்டியது. தற்சமயம், டிஜிட்டல் பரிவா்த்தனை துறையின் மதிப்பு 3 டிரில்லியன் டாலா் அளவுக்கு உள்ளது. இந்த நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இது 10 டிரில்லியன் டாலரை எட்டும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com