7 முறை சுடப்பட்டு உயிர்தப்பிய உ.பி. அரசு ஊழியர் யுபிஎஸ்சி தேர்வெழுதியது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், அதிகாரியால் 7 முறை சுடப்பட்டு உயிர்தப்பிய நிலையில், யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
7 முறை சுடப்பட்டு உயிர்தப்பிய உ.பி. அரசு ஊழியர் யுபிஎஸ்சி தேர்வெழுதியது ஏன்?
7 முறை சுடப்பட்டு உயிர்தப்பிய உ.பி. அரசு ஊழியர் யுபிஎஸ்சி தேர்வெழுதியது ஏன்?


புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், அதிகாரியால் 7 முறை சுடப்பட்டு உயிர்தப்பிய நிலையில், யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

உ.பி. அரசு ஊழியர் ரிங்கூ சிங் ராஹீ. இவர், தனது அலுவலகத்தில் நடந்த ஊழலை கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததால், ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் இவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 7 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ரிங்கூ படுகாயமடைந்து சிகிச்சை பெற்று பிறகு குணமடைந்தார்.

பொது வழங்கல் துறையில் தேர்ச்சி பெற்று முசாபர்நகரில் பணியில் சேர்ந்த ரிங்கூ, அங்கு நடைபெறும் ஊழலை கண்டறிந்தார். இதில் மூத்த அதிகாரிகளுக்கே தொடர்பிருப்பது தெரிய வந்தது. பல கோடிகள் மதிப்புள்ள அந்த ஊழல் தொடர்பாக புகார் அளித்தேன். இதனால் என்னை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றார்கள். அந்த தாக்குதலில் 7 குண்டுகள் பாய்ந்து சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தேன்.

துப்பாக்கிக் குண்டுகள் ரிங்கூவின் முகத்தைத் துளையிட்ட போதும்கூட அவரது தைரியம் குறையவில்லை. 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். தரவைரிசைப் பட்டியலில் 683வது இடத்தில் ரிங்கூ தேர்வாகியுள்ளார்.

உயர் பதவியை அடைவதன் மூலம் மேலும் பல ஊழல் சம்பவங்களை கண்டறிந்து நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று நினைத்ததால்தான் யுபிஎஸ்சி தேர்வையே எழுதினேன் என்கிறார் உற்சாகத்தோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com