இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: குவைத் அரசு வலியுறுத்தல்

உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்கள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள செய்தித் தொடா்பாளா்கள்.
சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள செய்தித் தொடா்பாளா்கள்.


உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்கள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார், குவைத் மற்றும் ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் வலியுறுத்தி உள்ளது. 

இஸ்லாமிய இறைத் தூதா் முகமது நபி (ஸல்) குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா,  மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட கட்சியின் தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன்குமாா் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. 

சா்ச்சை கருத்தைத் தொடா்ந்து நூபுா் சா்மா மீது மத உணா்வுகளை புண்படுத்தியதாக மும்பை, ஹைதராபாத், புணே உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டன.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்கள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என குவைத் அரசு வலியுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக கத்தார், குவைத் மற்றும் ஈரான் நாடுகள் இந்திய தூதர்களை அழைத்து இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர்களது கண்டனங்களை பதிவு செய்ததுடன், இதற்கு இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இஸ்லாமியர்கள் மீது இந்தியா திட்டமிட்டு துன்புறுத்தல்களை நிகழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகிகள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், தரக்குறைவான கருத்துக்கள் விளம்புநிலை சக்திகளின் கருத்துகள் மட்டுமே என்றும், எந்த வகையிலும் இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்று இந்திய தூததர்கள் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், "நமது நாகரிக பாரம்பரியம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான கலாச்சார மரபுகளுக்கு ஏற்ப, இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறது" என்று கூறினார்.

இந்த இழிவான கருத்துக்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டி இந்தியா-கத்தார் உறவுகளின் வலிமையைக் குறைக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட  தூதரக செய்தித் தொடர்பாளர், இதற்கு எதிராக இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மத ஆளுமையை இழிவுபடுத்தும் சில ட்வீட்கள் குறித்தும் கவலை தெரிவித்தனர். 

கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தண்டனையின்றி தொடர அனுமதிப்பது, மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், மேலும் பாரபட்சம் மற்றும் ஒதுக்குவதற்கு வழிவகுக்கும், இது வன்முறை மற்றும் வெறுப்புணர்ச்சியை உருவாக்குவதுடன், அரபு நாடுகளில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வழிவகுக்கும்.

உலகம் முழுவதும் உள்ள 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் முகமது நபியின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறார்கள் என்றும், அவருடைய செய்தி அமைதி, புரிதல் மற்றும் சகிப்புத்தன்மை மற்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஒளியின் கலங்கரை விளக்கமாக உள்ளது. அவற்றை புண்படுத்தும் வகையில், பாஜக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கத்தார் வலியுறுத்தி உள்ளது. 

துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தற்போது கத்தார் சென்றுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல்தானியை சந்தித்தார்.

பாஜக செய்தித் தொடா்பாளா்களின் முகமது நபி குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்கு அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com