பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மா ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மகாராஷ்டிர காவல்துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரிலும், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாத மேடையிலும் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளிப்படுத்தியதற்காக கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டனர்.
இவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட 15 நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இருவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மகாராஷ்டிர காவல்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
காவல்துறை அனுப்பியுள்ள சம்மனில், வரும் ஜூன் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


