தங்கக் கடத்தல் வழக்கில் பினராயிக்கு தொடர்பு: ஸ்வப்னா வாக்குமூலம்

பினராயி விஜயன் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, மகள் மீனா, மற்றும் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
பினராயி விஜயன் / ஸ்வப்னா சுரேஷ்
பினராயி விஜயன் / ஸ்வப்னா சுரேஷ்

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பினராயி விஜயன் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, மகள் வீனா, மற்றும் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தங்கம் கடத்துவது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு துபையில் பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் இந்த விவகாரத்தை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனா். 

தொடா்ந்து இந்த வழக்கில் தொடா்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியா் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா். மேலும், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், தங்கம் கடத்தல் வழக்கில் அரசியல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com