
காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஆளில்லாத விமானம் பறந்து வந்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் தூப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின் உடனடியாக, தாக்குதலிலிருந்து தப்பித்த அந்த சிறிய ரக ஆளில்லா விமானம்(டிரோன்) அங்கிருந்து திரும்பிச் சென்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தானிலிருந்து வந்த ஆளில்லா விமானத்தை இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.