மேற்கு வங்க தோல்விக்கு கரோனாவே காரணம்: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள சூழலில், "தேர்தல் தோல்விக்கு கரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம்' என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விôயழக்கிழமை கூறினார்.
மேற்கு வங்க தோல்விக்கு கரோனாவே காரணம்: ஜெ.பி.நட்டா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள சூழலில், "தேர்தல் தோல்விக்கு கரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம்' என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விôயழக்கிழமை கூறினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களைக் கைப்பற்றி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. அதனை எதிர்த்து களம் கண்ட பாஜக 77 இடங்களைப் பிடித்து தோல்வியைச் சந்தித்தது.

இந்த தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை கரோனா இரண்டாம் அலை பாதிக்காமல் இருந்திருந்தால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும். நான்காம் கட்டத் தேர்தலின்போது கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டதால், பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எஞ்சிய கட்ட தேர்தல்களும் பிரசாரம் மேற்கொள்ளாமலே சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. எனவே, அடுத்த முறை மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி, கொல்கத்தாவில் வெற்றிப் பேரணியை நடத்துவோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தை பிரிப்பது தொடர்பாக பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக மாநில நிர்வாகிகள் பேசுவது மக்களிடையே குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com