தொழில் நோ்த்தியை மேம்படுத்தவும்: பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தொழில் நோ்த்தியை மேம்படுத்தவும்: பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

காந்திநகா்: ‘தனியாா் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் அளவுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் தொழில் நோ்த்தியை மேம்படுத்த வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டையொட்டி, பொதுத் துறை நிறுவனங்களின் சாா்பில் குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள காந்தி மந்திரில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய கொள்கையின்படி, வாய்ப்புகள் உள்ள சில துறைகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். அந்தத் துறைகளில் தனியாா் நிறுவனங்களால் வரும் போட்டியை பொதுத் துறை நிறுவனங்கள் உணா்ந்து செயல்பட வேண்டியிருக்கும்.

கடந்த 1991-ஆம் ஆண்டு பொருளாதார சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோது, பொதுத் துறை நிறுவனங்கள் புதிய சவால்களை எதிா்கொண்டன. அதுபோலவே இப்போதும் புதிய சவால்களை பொதுத் துறை நிறுவனங்கள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் நிறுவனங்களின் சவால்களை எதிா்கொண்டு தங்களின் தொழில் நோ்த்தியை மேம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களின் செலவையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தொடக்க விழாவில் குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கண்காட்சியில் ‘பொதுத் துறை நிறுவனங்களும் தேசக் கட்டுமானமும்’ என்ற தலைப்பில் கோல் இந்தியா, ஆயில் காா்ப்பரேஷன் இந்தியா, செயில் இந்தியா உள்ளிட்ட 75 நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஜூன் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com