ஒடிசாவில் கவிழ்ந்த எண்ணெய் லாரி: ஓடிச் சென்று உதவியவர்களுக்கு நேர்ந்த கதி

ஒடிசா மாநிலம் நயாபார் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் நயாபார் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்து வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

பாரதீப் துறைமுகத்திலிருந்து சம்பல்பூர் பகுதிக்கு எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாடா பந்துசாரா பாலத்தில் எண்ணெய் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கீழே விழுந்தது.

இந்த சம்பவம் நள்ளிரவு 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. லாரி விழுந்த வேகத்தில், டேங்கரில் இருந்த எண்ணெய் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், நான்கு பேர் பலியாகினர்.

பலியானவர்களில் ஓட்டுநர், உதவியாளர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், விபத்து நிகழ்ந்ததைப் பார்த்ததும் அதிலிருந்தவர்களை மீட்கச் சென்ற  மூன்று பேரில், லாரி வெடித்துச் சிதறியதில் இருவர் உயிரிழக்க, ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com