பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்

உங்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளன. 
பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
Published on
Updated on
2 min read

உங்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளன. 

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை மட்டும், பயனாளர்களின் வங்கிக் கணக்கில், வரவு வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி.. நம்முடைய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? அதற்கு வட்டி எவ்வளவு வரும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. வீட்டிலிருந்தே எஸ்எம்எஸ், ஆன்லைன், தவறிய அழைப்பு, உமங் செயலி என பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் எப்படி அறிவது?
https://epfindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்களது UAN எண்ணைப் பதிவிட்டு, கடவுச் சொல் மற்றும் கேப்சாவை சரியாக பதிவிடவும்.

அதில், இ-பாஸ்புக் என்று இருக்கும், அதை கிளிக் செய்யவும்.

அனைத்துத் தகவலும் சரியாக இருந்தால், புதிய பக்கத்துக்குச் செல்லும்.

அங்கு மெம்பர் ஐடி என்று இருக்கும். அதைத் திறந்தால், உங்களது வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் தொகை காண்பிக்கப்படும்.
 

உமங் செயலி 

செல்லிடப்பேசியில் உமங் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

அதில் இபிஇஎஃப் என்பதை கிளிக் செய்யவும்.

எம்ப்ளாயி சென்ட்ரிக் சர்வீசஸ் என்பதை கிளிச் செய்யவும்.

பாஸ்புக் வழியாக என்ற வாய்ப்பை தேர்வு செய்யலாம்.

பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிக்கு ஓடிபி வரும்.

அதனை பதிவிட்டால், உங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருக்கும் தொகை தெரியவரும்.
 

குறுந்தகவல் மூலமாக
யுஏஎன் இணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள், வருங்கால வைப்பு நிதி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து 'EPFOHO UAN' என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் உங்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தவறிய அழைப்பு (மிஸ்டுகால்)
யுஏஎன் இணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள், 011-22901406 என்ற எண்ணிற்கு, வருங்கால வைப்பு நிதி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து மிஸ்டு கால் எனப்படும் தவறிய அழைப்பை மேற்கொண்டால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com