தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டித் தொகையானது, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவிருக்கிறது.
இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டித் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) வட்டி விகிதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை இப்போது எளிதாக வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டுகால், உமங் செயலி என பல்வேறு வழிகளில் ஒருவர், தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



