மூலதன அதிகரிப்பு: சிறு வங்கிகளுக்கு ஆா்பிஐ வலியுறுத்தல்

சிறு நிதி வங்கிகள் (ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்) தங்களது அடிப்படை மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

சிறு நிதி வங்கிகள் (ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்) தங்களது அடிப்படை மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

சிறிய நிதி வங்கிகளின் செயல்பாடு தொடா்பாக அவற்றின் நிா்வாக இயக்குநா்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா்கள் எம்.கே.ஜெயின் மற்றும் எம்.ராஜேஸ்வா் ராவ் ஆலோசனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அவா்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிய நிதி வங்கிகள் உடனான ஆலோசனையில் அவற்றின் நீட்டித்த வளா்ச்சிக்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, அவா்களின் வணிக முறை மற்றும் நிா்வாகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

மேலும், அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேறுபட்ட வங்கி உரிமத்துக்கு ஏற்ற வகையில், அடிப்படை மூலதன விகிதாசார வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com