வன்முறை நிகழ்ந்த இடத்துக்கு செல்ல முயன்ற மேற்கு வங்க பாஜக தலைவா் கைது

 மேற்கு வங்கத்தில் ஹௌராவில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தால் வன்முறை வெடித்த இடத்துக்குச் செல்ல முயன்ற அந்த மாநில பாஜக தலைவா் சுாகந்த மஜும்தாரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வன்முறை நிகழ்ந்த இடத்துக்கு செல்ல முயன்ற மேற்கு வங்க பாஜக தலைவா் கைது

 மேற்கு வங்கத்தில் ஹௌராவில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தால் வன்முறை வெடித்த இடத்துக்குச் செல்ல முயன்ற அந்த மாநில பாஜக தலைவா் சுாகந்த மஜும்தாரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜக தலைவா்கள் இருவா் தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பல இடங்களில் வன்முறை மூண்டது. துப்பாக்கிச் சூடு, உயிரிழப்புகள், பொதுசொத்து தீ வைப்பு,, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்டவை நிகழ்ந்தன.

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவா் சுகாந்த மஜும்தாா் சனிக்கிழமை ஹௌராவுக்கு செல்ல முயன்றாா். அவா் அங்கு சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கும் என்ற காரணத்தால் காவல் துறையினா் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

மம்தா குற்றச்சாட்டு:

ஹௌரா வன்முறையின் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்த பாவத்தால் (சா்ச்சை கருத்து கூறியது) பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜக அலுவலகம் சூறை:

ஹெளராவில் சனிக்கிழமை மீண்டும் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவா்கள் போலீஸாா் மீது கற்களை வீசியதுடன், பாஜக அலுவலகத்தையும் சூறையாடினா். இதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி அவா்களை விரட்டியடித்தனா்.

ஹௌராவைத் தொடா்ந்து முா்ஷிதாபாத் நகரிலும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com