5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கும் தொழில் துறையினருக்கும் அதிவேக இணையவசதி தேவைப்படுகிறது.
இதனால், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக இந்தியச் சந்தையின் காத்திருப்பு விரைவில் நிறைவேற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம், விலை ஆகியவை தொடா்பாக, தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) சில பரிந்துரைகளை அளித்தது.
இந்நிலையில், 5ஜி இணைய சேவைக்கான ஏலத்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜுலை மாத இறுதிக்குள் ஏலம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, முக்கிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டு மெல்ல நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும்.
5ஜி இணையம் 4ஜி இணையத்தை விட 10 மடங்கு வேகமானது என வல்லுனர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.