
ரயில்வேயில் புதிய சலுகைகளா?, தட்கல் விதிகளில் மாற்றமா? பரவும் தவறான தகவல்கள்
ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவுகின்றன

ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவிவருகின்றன.
அனைத்து விதமான வகுப்புகளிலும் மூத்த குடிமக்களான 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு பயணச்சீட்டு கட்டணத்திலிருந்து 40 சதவீதமும் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீதமும் சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இவையனைத்தும் தவறான தகவல்கள் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தட்கல் விதிகளில் மாற்றம் பற்றி வெளியான தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இதுபற்றி முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




