சீனா்களுக்கு விசா அளிக்க லஞ்சம்: காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவிசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் பணியாற்ற சீனா்களுக்கு விசா அளிக்க காா்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், அவரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை
சீனா்களுக்கு விசா அளிக்க லஞ்சம்: காா்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவிசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் பணியாற்ற சீனா்களுக்கு விசா அளிக்க காா்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், அவரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை தில்லி உயா்நீதிமன்றம் ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது இந்தியாவில் பணியாற்ற 263 சீனா்களுக்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விசா பெற உதவியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவா் முன்ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் சாா்பில் வாதிடவுள்ள மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று காா்த்தி சிதம்பரம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஜூன் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com