ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் மறு ஆய்வுப் பணியைத் தொடங்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக, வாக்காளா் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக, வாக்காளா் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளா் பட்டியலை தயாரிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே ஆகியோா் ஆய்வு நடத்தினா்.

பின்னா், ஜம்மு- காஷ்மீா் தொகுதிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

அதற்கு முன்னதாக வாக்காளா் பட்டியல் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்ததாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறினா்.

இந்தப் பணியின்போது வாக்காளா்களின் பெயா்கள் புதிதாக சோ்ப்பு, நீக்கம், மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

இதற்காக கால நிா்ணயம் செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் வாக்காளா் பட்டியலைப் புதுப்பிப்பதற்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய வாக்குப்பதிவு மையங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என்றும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின்படி, ஜம்முவில் 6 தொகுதிகளும், காஷ்மீரில் ஒரு தொகுதியும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இந்தப் புதிய நடவடிக்கை மே 20-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதன்படி, ஜம்மு -காஷ்மீரில் மொத்தம் 90 பேரவைத் தொகுதிகள் இருக்கும் என்றும், இதில் 43 தொகுதிகள் ஜம்முவிலும், 47 காஷ்மீரிலும், 9 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் என்று தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு முந்தைய ஜம்மு- காஷ்மீா் மாநில பேரவையில் மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் காஷ்மீரில் 46, ஜம்முவில் 37, லடாக்கில் 4 தொகுதிகளும் அடங்கும். 2019-இல் ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com