பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால் மேலதிகாரிகளுக்கு கோபம்தான் வரும். பணி பாதிக்குமே என்று. ஆனால், இங்கு தன்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறைக் கடிதத்தை மேலதிகாரி, சமூக வலைத்தளத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.
ஒரு ஊழியர் தனது மேலதிகாரிக்கு அனுப்பியிருக்கும் விடுமுறை கோரிய மின்னஞ்சலின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர, பலராலும் அது ரசிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இவை ஆப் இல்லை; ஆப்புகள்; உடனடியாக டெலீட் செய்யவும்: சைலேந்திரபாபு
ஷஹில் என்பவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படத்திலிருக்கும் மின்னஞ்சலைப் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும்.
சரி அப்படி என்னதான் இருக்கிறது அந்த விடுமுறைக் கடிதத்தில் என்றால், அன்புள்ள ஐயா, இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம் என்னவென்றால், எனக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வேண்டும், மற்றொரு நிறுவனத்தில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விடுமுறை தேவைப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்திருக்கும் மேலதிகாரியோ, எனது ஊழியர்கள் மிகவும் இனிமையானவர்கள், நேர்காணலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி விடுமுறை கேட்டுள்ளார் என்று தனது கருத்தைப் பதிவிட்டு அந்த மின்னஞ்சலின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
இதனை பலரும் தங்களது பக்கத்தில் பகிர்ந்திருப்பதோடு, பலரும் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.