அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவைத் தொடக்கி வைத்த ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் ஜூன் 30 முதல் அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் ஹெலிகாப்டர் முன்பதிவை லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்.
அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவைத் தொடக்கி வைத்த ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் ஜூன் 30 முதல் அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் ஹெலிகாப்டர் முன்பதிவை லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்.

முதன்முறையாக பக்தர்கள் ஸ்ரீநகரில் இருந்து நேரடியாக பஞ்சதர்னிக்கு எளிதாகப் பயணம் மேற்கொண்டு, ஒரே நாளில் புனித யாத்திரையை முடிக்க முடியும் என்று சின்ஹா தனது சுட்டுரையில் தெரிவித்தார். 

ஸ்ரீநகரில் இருந்து வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்துவது அரசின் நீண்டகால முயற்சியாக இருந்ததாக சின்ஹா கூறினார்.

பக்தர்கள் முன்பதிவு செய்ய கோயில் வாரிய இணையதளத்தில் எளிதாக உள்நுழையலாம். இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி ரக்ஷாபந்தனுடன் நிறைவடைகிறது. 

இந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com