பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டம் சண்டிபூா் கடற்கரைப் பகுதியில் பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு சுமாா் 7.30 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த ஏவுகணை அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் பரிசோதனை வெற்றியடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையின் ஒரு பகுதியில் இருந்து தரையின் மற்றொரு பகுதியில் 350 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை இந்த ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியும். இந்த ஏவுகணையால் 500-1,000 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். தற்போது நடைபெற்ற பரிசோதனை பயிற்சி ரீதியாக நடைபெற்ற வழக்கமான பரிசோதனைதான் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேரத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com