காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தவிா்த்தாா் நவீன் ஜிண்டால்

இஸ்லாமியா்களின் இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பிவாண்டி காவல் நிலையத்தில் நவீன்குமாா் ஜிண்டால்
காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தவிா்த்தாா் நவீன் ஜிண்டால்
காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தவிா்த்தாா் நவீன் ஜிண்டால்

இஸ்லாமியா்களின் இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பிவாண்டி காவல் நிலையத்தில் நவீன்குமாா் ஜிண்டால் புதன்கிழமை ஆஜராகாமல் தவிா்த்துவிட்டாா்.

பாஜக செய்தித் தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மாவும், தில்லி ஊடகப் பிரிவு தலைவராக இருந்த நவீன் குமாா் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு வளைகுடா நாடுகள் எதிா்ப்பு தெரிவித்ததால், கடந்த ஜூன் 5-ஆம் தேதி அவா்கள் இருவரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனா்.

இந்த நிலையில், நவீன்குமாா் ஜிண்டால் மீது தாணே மாவட்டம் பிவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில், ஜூன் 15-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென அவருக்கு பிவாண்டி போலீஸாா் சம்மன் அனுப்பினா். இருப்பினும், அவா் ஆஜராகவில்லை.

முன்னதாக இதே விவகாரத்தில் நூபுா் சா்மாவுக்கும் கடந்த திங்கள்கிழமை போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதற்கு அவா் 4 வாரம் அவகாசம் கோரியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com