ஜூன் 28, 29-இல் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஸ்ரீநகரில் வரும் ஜூன் 28, 29-இல் நடைபெறுவதாக நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது

சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஸ்ரீநகரில் வரும் ஜூன் 28, 29-இல் நடைபெறுவதாக நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். சரக்கு-சேவைகள் வரி நாடு முழுவதும் கடந்த 2017 ஜூலை 1-இல் நடைமுறைக்கு வருவதற்கு, கவுன்சிலின் 14-ஆவது கூட்டம் அதே ஆண்டு மே 18, 19-இல் ஸ்ரீநகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போதுதான் 1,211 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில், வரி சீரமைப்பு மற்றும் சூதாட்ட விடுதி, இணையதள விளையாட்டுகளின் மீதான வரி விதிப்பு குறித்து மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு தாக்கல் செய்த அறிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளதால், இந்த 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் வரிவிதிப்பு நடைமுறையில் எளிமையைக் கடைப்பிடிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தின்போது ஆலோசனை நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மாநில நிதியமைச்சா்கள் குழு ஜூன் 17-இல் கூடி வரி வீதங்களில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரி விகிதத்தை சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்கான ஆலோசனையை அளிப்பதற்காக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் 7 போ் கொண்ட குழுவை கடந்த ஆண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் நியமித்தது. இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பரில் கூடி விவாதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com