
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடந்த 3 நாட்களாக பல்வேறு கனரக வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பனிஹால் அருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 270 கிமீ நெடுஞ்சாலையில் ரோம்பாடியில் காலை 11 மணியளவில் நான்கு வழிச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துணைக் கண்காணிப்பாளர் அஸ்கர் மாலிக் கூறுகையில்,
மலையிலிருந்து பெரிய பாறைகள் கீழே உருண்டு, நெடுஞ்சாலையை முற்றிலுமாக மூடியுள்ளது. நெடுஞ்சாலையை சீரமைக்க குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் தேவைப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைக்கு இணைப்பு வழங்கும் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சாலை துப்புரவுப் பணியாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...