அங்கீகாரம் இன்றி செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை

சென்னையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அமிா்த ஜோதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அமிா்த ஜோதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் இல்லங்களைப் பதிவு செய்து, இளைஞா் நீதிச்சட்டம் 2015-இன் கீழ் முறைப்படுத்துதல், குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்தல், இல்லங்களில் மேலாண்மை குழுக் கூட்டம் நடத்துவதை உறுதி செய்தல், இல்ல சிறாா்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாவட்டத்தில் இளைஞா் நீதிச் சட்டம் 2015-இன் கீழ் பதிவு பெறாமல் எந்தவொரு உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தாங்கள் நன்கொடை வழங்கும் இல்லங்கள் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னா் வழங்க வேண்டும். இதுதொடா்பான தகவல்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை க்ஸ்ரீல்ள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்2ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம், ம்ஹண்ப்ற்ா்:க்ஸ்ரீல்ள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்2ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மற்றும் 99406 31098 கைப்பேசி எண், 044 25952450 என்ற தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com