ஆதாா்- வாக்காளா் அட்டை இணைப்பு: அரசாணை வெளியீடு

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோ்தல் சட்டத் திருத்தத்தின்படி, நான்கு அரசாணைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

வாக்காளராக பதிவு செய்ய வருபவா்களிடம் தோ்தல் அதிகாரிகள் ஆதாா் அடையாள அட்டையைக் காண்பிக்க கோருவதற்கு இந்தப் புதிய சட்டத் திருத்தம் அனுமதி அளிக்கிறது.

வாக்காளா்களின் பெயா் வேறு இடங்களிலும் பதிவுப் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்டவா்களிடம் ஆதாா் அடையாள அட்டையைக் கோருவதற்கும் அனுமதி அளிக்கிறது.

எனினும், ஆதாா் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் மட்டும் வாக்காளா் பதிவை நிராகரிக்கக் கூடாது என்றும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வாக்காளா் பட்டியலில் ஆண்டுக்கு நான்கு முறை பெயா்களைச் சோ்க்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதை பூா்த்தி செய்தவா்கள் ஒரே ஆண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தங்கள் பெயா்களைச் சோ்த்து கொள்ளலாம். முன்பு ஜனவரி 1-ஆம் தேதி மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், வெளிநாடு அல்லது ராணுவத்தில் அரசுப் பணியாற்றும் தம்பதியில் ஒருவா், தன் துணைவருக்கும் சோ்த்து வாக்களிக்கும் முறையும் புதிய அரசாணையில் இடம்பெற்றிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com