'சாலையில் ராகுல் காந்தியின் ஆதரவாளர்': காரில் அழைத்துச் சென்ற பிரியங்கா

தில்லியில் ராகுல் காந்தியின் ஆதரவாளர் ஒருவரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார். 
'சாலையில் ராகுல் காந்தியின் ஆதரவாளர்': காரில் அழைத்துச் சென்ற பிரியங்கா
Updated on
1 min read

தில்லியில் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர் ஒருவரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது காரில் அழைத்துச் சென்றார். 

காரில் செல்லும்போது காங்கிரஸ் கட்சிக் கொடியின் வண்ணத்தில் ராகுலின் புகைப்படம் இருந்த உடை அணிந்து கொண்டு சாலையில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். 

அவரைக் கண்ட பிரியங்கா காந்தி தனது பாதுகாவலர்களை அனுப்பி விசாரித்ததன் மூலம் அவர், காங்கிரஸ் தொண்டன் என்பதும், ராகுல் காந்தியின் தீவிர ரசிகன் என்பதும் தெரியவந்தது. 

ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்திற்காக பிரியங்கா காந்தி சென்றுகொண்டிருந்ததால், சாலையில் கண்ட தொண்டரையும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது காரில் அழைத்துச் சென்றார். 

நேஷ்னல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் இதுவரை  3 நாள்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com