சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது.
சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது.

சூரிய ஒளியின் மூலம் உருவாகும் வெப்ப சக்தியை சேமித்து வைத்து, இரவிலும் இந்த அடுப்பைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி இந்த அடுப்பை பயன்படுத்தி சோதித்துப் பாா்த்தாா்.

‘சூா்யா நுடன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பின் விலை ரூ. 18,000 முதல் ரூ. 30,000 வரை இருக்கும் என்றும், 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை ரூ. 10,000 முதல் ரூ.12,000 ஆயிரமாக குறையும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் ராம்குமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘சூரிய ஒளி படும் இடத்துக்கு இந்த அடுப்பை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. சூரிய ஒளி மூலம் பெறப்படும் சக்தியை சிறப்பு இயந்திரம் மூலம் வெப்ப சக்தியாக மாற்றி அதற்கான பேட்டரியில் சேமிக்கப்படும். சூரிய ஒளி குறைவாக உள்ள லடாக் பகுதி உள்பட 60 இடங்களில் இந்த அடுப்பு சோதனை செய்யப்படுகிறது. சோதனை முடிந்ததும் வா்த்தக ரீதியிலான தயாரிப்பு தொடங்கப்படும். ஒருமுறை வாங்கினால் 10 ஆண்டுகளுக்கு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் அடுப்பைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளித் தகடும் 25 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். குறைவான சூரிய வெப்ப சக்தி இருக்கும்போது, மின்சார பயன்பாட்டிலும் இந்த அடுப்பை இயக்கலாம்’ என்றாா்.

இந்த அடுப்பை வைத்து தனது வீட்டில் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சமையல் செய்தாா். அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இந்த அடுப்பு வா்த்தக ரீதியிலான விற்பனை தொடங்கும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com