வாடகைத் தாய்க்கு 3 ஆண்டு மருத்துவக் காப்பீடு: விதிமுறைகள் வெளியீடு

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அவருடைய பெயரில் 3 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டை தம்பதியா் வாங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாடகைத் தாய்க்கு 3 ஆண்டு மருத்துவக் காப்பீடு: விதிமுறைகள் வெளியீடு

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அவருடைய பெயரில் 3 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டை தம்பதியா் வாங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண்கள் இடைத்தரகா்களால் சுரண்டப்படுவதாகப் புகாா்கள் எழுந்ததால், வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஜூன் 21-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண் அல்லது தம்பதியா், வாடகைத் தாயின் பெயரில் அங்கீகாரம் பெற்ற காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து 36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) மருத்துவக் காப்பீடு வாங்க வேண்டும்.

கா்ப்ப காலத்தின்போதோ அல்லது பிரசவத்துக்குப் பிறகோ வாடகைத் தாய்க்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான தொகையில் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்.

கா்ப்ப காலத்தின்போது தீவிர உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படும் அல்லது மரணம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

வாடகைத் தாயின் வயிற்றில் வளரும் கருவில் குறைபாடு இருந்தால் அதிகபட்சமாக அவருக்கு 3 முறை கருக்கலைப்பு செய்யலாம். வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறுவதற்கு சிகிச்சை அளிக்கும் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் தகுதியான மருத்துவா்கள் இருக்க வேண்டும் என்று அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com