பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!

அவர் பயணித்த சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் மாயமாய் மறைந்துவிட்டதன் மாயத்தை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.
பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!
பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!


பெங்களூரு: பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், அவர் பயணித்த சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் மாயமாய் மறைந்துவிட்டதன் மாயத்தை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

பெங்களூருவிலிருந்து பிரதமர் மோடி கிளம்புவதற்குள், சாலைகளில் போடப்பட்ட தார் கரைந்துபோய்விட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பொதுவாக, சீரமைக்கப்படாத சாலைகளில், மழைக்காலங்களில் மோசமடைவது வழக்கம்தான் என்று பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், சீரமைக்கப்பட்ட சாலைகளில் மோசமடைந்திருப்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தார். அவரது வருகையை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் தார் போடப்பட்டு வெள்ளைக் கோடுகள் போடப்பட்டன. சில சாலைகளில் பள்ளம், மேடுகள் தார்களைக் கொண்டு நிரப்பி சீரமைக்கப்பட்டன. இவையாவும் கடந்த வாரம் பெய்த மழையால் காணாமல் போய்விட்டன.

இந்த சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டும் பெங்களூரு மாநகராட்சி 23.5 கோடி ரூபாயை செலவிட்டது என்கிறார் சிறப்பு ஆணையர் ரவீந்திரா.

கெங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் சில காரணங்களால் சாலை சீரமைப்புகள் மிக துரித கதியில் நடைபெற்றன. அதனால்தான், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

மழை பெய்ததில், பல சாலைகளில் மீண்டும் குண்டும் குழியுமாகிவிட்டது. இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com