
நதியோட்டத்திலிருந்து குட்டியைக் காக்கும் யானை: அருமையான விடியோ
தாயின் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை. அது மனிதர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் விலங்குகள் சளைத்ததல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது இந்த விடியோவைப் பார்க்கும்போது.
சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி ஒருவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விடியோ பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த ஆழத்தில் வேகமாக பாய்தோடிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய நீரோடையை யானைகள் கூட்டம் கடந்த சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக நீரோடையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு யானைக் குட்டி மட்டும் நீரோட்டத்துக்கு எதிர்நடை போடத் தெரியாமல் தள்ளாடியபடி, நீரோட்டத்துடனே சென்றது.
இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
இதனைக் கண்ட தாய் யானை, தனது குட்டியை நீரோட்டத்துக்கு எதிராக கரை சேர்க்க ஓடோடிச் சென்றது. குட்டி யானையோ, முன்பின் நீரோடையில் இறங்கி பழக்கமில்லாததால் அந்த நீரோட்டத்துக்கு எதிராக நடக்க முடியாமல் தத்தளித்தது. தாயின் அரவணைப்பை ஏந்திக் கொள்ள முற்பட்டாலும், தன்னால் நீரோட்டத்தின் சக்தியை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றது குட்டியானை. ஆனாலும் விடாமல் தாய் யானை தனது குட்டியானையை பிடிக்கப் பார்த்தது. ஆனால் வேகமாகச் சென்ற நீருடனே குட்டியானை அடித்துச் செல்ல நீரின் வேகத்தை விட தனது வேகத்தைக் கூட்டியது தாய் யானை. பிறகு, குட்டியானைக்கு அருகே சென்று, அந்த நீரோட்டத்திலிருந்து கரைப்பக்கமாகத் திருப்பி பாதுகாப்பாக இருக்க வைத்தது.
Mother saved its kid getting washed away & escorts her to safety sweetly below her legs. Herd waits for them to join. Incredible social bonding in animal world.
— Susanta Nanda IFS (@susantananda3) June 24, 2022
VC:I love Silguri pic.twitter.com/7qkBGoX7Gd
பிறகு, தனது கால்களுக்குள் குட்டியானையை அரவணைத்துக் கொண்டு மெல்ல மேலேறிச் செல்லும் பகுதிக்குக் கொண்டு வந்தது. பிறகு அதனை மேலேற்றிவிட்டு, அதனுடன் சேர்ந்து ஆனந்த நடை போட்டு தங்களது கூட்டத்தை தவரவிட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு வீறுநடை போட்டுச் சென்றது.