நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் தயார்

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள அவரது சிவசேனை கட்சியைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் தயாராக உள்ளனர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார். 
எம்எல்ஏ தீபக் கேசர்கர்
எம்எல்ஏ தீபக் கேசர்கர்


புது தில்லி: மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள அவரது சிவசேனை கட்சியைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் தயாராக உள்ளனர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் முதல்வருக்கு எதிராக அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனா். மேலும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் அவா்களுக்கு ஆதரவாக உள்ளனா். இந்நிலையில், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் எழுத்துப்பூா்வ பதிலளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸ் எதிராக அதிருப்தி எம்எல்ஏ ஏக்னாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நாளை திங்கள்கிழமை விசாரிக்கிறது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக எம்எல்ஏ தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.  

அதாவது, மகாராஷ்ரம் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எதிர்கொள்ள ஷிண்டே முகாமின் எம்.எல்.ஏ-க்கள் தயாராக உள்ளனர். 

இன்னும் 3-4 நாள்களில் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம். அதன் பிறகு, நாங்கள் நேரடியாக மகாராஷ்டிரத்துக்குச் செல்வோம் என்று சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com