
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது" என்றனர். முதல்வர் யோகி தற்போது வாராணசியில் உள்ளார். சாலை மார்க்கமாக விமான நிலையத்தைச் சென்றடையவுள்ள முதல்வர், அரசு விமானம் மூலம் லக்னௌவுக்குப் பயணிக்கவுள்ளார்.
ஹெலிகாப்டரின் ஜன்னலில் பறவை மோதியதாகத் தெரிகிறது. எனினும், இதுபற்றிய விரிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.