
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுவதையொட்டி, அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.
சிங்கப்பூரின் டிஎஸ்-இஒ, நியூசா் உள்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 30) மாலை 6 மணிக்கு ஏவப்படுகிறது.
சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது.