
அமர்நாத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வழிபாடு செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியுள்ளது.
அதன் முதல் பூஜை இன்று நிறைவடைந்ததாகவும், அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், மகாதேவ் மற்றும் பாபா அமர்நாத் அருளால் பயணம் வெற்றியடையும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் நல்ல தரிசனம் பெறவும் அவர்கள் பத்திரமாக வீடு திரும்பவும் பிரார்த்திக்கிறேன்.
இந்த வாரத் தொடக்கத்தில், ஜம்முவில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்ஹா ஆய்வு செய்தார்.
அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து இன்று தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...