
k-k-venugopal_atorny-general_094821
அட்டா்னி ஜெனரலாக (மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞா்) கே.கே.வேணுகோபால் (91) மேலும் 3 மாதங்களுக்கு பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளாா். மத்திய அரசின் வேண்டுகோளை அடுத்து அவா் பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டாா்.
அவரது பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவா் பதவியில் தொடர விரும்பம் தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவா் அடுத்த 3 மாதங்களுக்கு பணியில் தொடர இருக்கிறாா்.
2017 ஜூலை முதல் அவா் அட்டா்னி ஜெனரலாகப் பணியாற்றி வருகிறாா். மூத்த வழக்குரைஞரான அவா், அரசியல்சாசன சட்டம், பெரு நிறுவனச் சட்டங்கள் தொடா்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறாா். 1979-80-ஆம் ஆண்டுகளில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாகவும் அவா் பதவி வகித்துள்ளாா். 2002-ஆம் ஆண்டு பத் பூஷண் விருதும், 2015-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.