
நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வு, தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதித் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17-ஆம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தொடங்கி மே 20-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 18 லட்சத்து 72,339 போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42,286 போ் பதிவு செய்துள்ளனா். திட்டமிட்டபடி நீட் தோ்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், தோ்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.