உ.பி.: இறுதிக்கட்டத் தேர்தலில் இத்தனை குற்றப்பின்னணி வேட்பாளர்களா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
உ.பி.: இறுதிக்கட்டத் தேர்தலில் இத்தனை குற்றப்பின்னணி வேட்பாளர்களா?
உ.பி.: இறுதிக்கட்டத் தேர்தலில் இத்தனை குற்றப்பின்னணி வேட்பாளர்களா?


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடும் 607 வேட்பாளர்களில், 170 பேர் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் என்பதுதெரிய வந்துள்ளது. இது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 131 வேட்பாளர்களுக்கு எதிராக மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியிலில் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. அதன் 45 வேட்பாளர்களில் 26 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். பாஜகவின் 47 பேரில், 26 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 52 வேட்பாளர்களில் 20 பேரும் அப்படிப்பட்டவர்களே.

காங்கிரஸ் கட்சி சார்பில் 20 பேரும் ஆம் ஆத்மி சார்பில் 8 பேரும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர்.

இந்த அடிப்படையில், 54 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவில், 35 தொகுதிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com