சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?

சென்னையின் மிக முக்கிய பகுதியிலிருந்த தனக்குச் சொந்தமான வீட்டை, ஆனந்த் சுப்பிரமணியனின் மனைவி சுனிதா ஆனந்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?
சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?

சென்னையின் மிக முக்கிய பகுதியிலிருந்த தனக்குச் சொந்தமான வீட்டை, ஆனந்த் சுப்பிரமணியனின் மனைவி சுனிதா ஆனந்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரா ராமகிருஷ்ணா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் இந்த விற்பனையும் சப்தமே இல்லாமல் நடந்தேறியுள்ளது.

தேனாம்பேட்டையில் சீதாம்மாள் காலனி விரிவாக்கத்தில் அமைந்திருக்கும் ஒரு வீட்டை, ரூ.3.2 கோடிக்கு, பிப்ரவரி 23, 2021 அன்று பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணா.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும், இமயமலையில் வாழ்வதாகக் கூறப்படும் சாமியாருக்கும் இடையே ஒரு இணைப்புப் புள்ளியாகச் செயல்பட்டவர்தான் இந்த ஆனந்த் சுப்ரமணியன்.

2081 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வெள்ளை நிற, அடுக்குமாடி குடியிருப்பில், 5 மாடிகள் உள்ளன. இதற்கு விஷ்ராந்தி (ஓய்வு) என்று பெயர். வெறும் நான்கு குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்த குடியிருப்பின் கீழ், ஒரு ஜாகுவார் மற்றும் இரண்டு பிஎம்டபிள்யூ கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்குதான், திரைப்படத்துறையில் காமெடியனாக நடிக்கும் முன்னணி நடிகர் ஒருவர் வசித்து வருகிறார்.

தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக புது தில்லி அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் ஆனந்த், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் இந்த வீட்டில்தான் வசித்து வந்ததாக அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சித்ரா பெயரில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்ட இந்த வீட்டில்தான், ஆனந்த் இவ்வளவு காலம் வசித்து வந்துள்ளார். இந்த வீட்டை சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சித்ரா, ஆனந்த்துக்கு விற்பனை செய்துள்ளார். இது 2013 ஏப்ரல் - 2016 அக்டோபர் கால கட்டத்தில் சித்ராவும் ஆனந்தும் தேசியப் பங்குச் சந்தையில் பதவிகளை வகித்தபோது செய்த முறைகேடுகளின் வரைபடத்தில் அவர்கள் திட்டமிட்டதை திட்டதுபோல செயல்படுத்தி வருவதற்கு ஆதாரமாக மாறியுள்ளது.

ஆனந்த், அந்தப் பகுதியிலேயே வசித்து வருபவராகவே முற்றிலும் மாறியிருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர் நாள்தோறும் அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த காலனியின் சங்க உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார்.

அவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர் மிகவும் கஞ்சம் என்பதோடு, மற்றபடி நல்லவர்தான் என்றும் கூறியிருக்கிறார்கள். கணக்கு வழக்குகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார் என்றும், காலனி தொடர்பாக சட்ட விவகாரங்களில் அவர் அதிக கவனம் செலுத்துவதோடு, ஆலோசனைகளையும் வழங்குவார் என்று தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் தெய்வ பக்தி கொண்டவர்களாகவே காட்சியளித்துள்ளனர்.  ஆனால் இது தவிர வேறு யாரும் அவர்களது வீட்டுக்குள் சென்றது இல்லையாம். அவர்களைப் பற்றிய பல்வேறு விஷயங்கள் இதுவரை ரகசியமாக இருந்துள்ளது. அவர் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்கிறார், நாள்தோறும் அவரை சந்திக்கும் அண்டை வீட்டார். இதில் மிகவும் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், அவர் கைது செய்யப்படும் வரை அவருக்கும் தேசிய பங்குச் சந்தையும் தொடர்பிருக்கிறது என்பதையே யாருமே அறிந்திருக்கவில்லையாம்.

ஆனந்த் மட்டுமல்ல, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது மனைவி சுனிதாவும் சென்னையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்தில் மிக முக்கிய பதவியை வகித்தவர் என்பதையும் இங்கே நினைவில்கொள்ளவேண்டும்.

ஆனந்த் கைது செய்யப்பட்ட பிறகுதமான், இந்தக் குடும்பத்துக்கும் தேசிய பங்குச் சந்தைக்கும் தொடர்பிருப்பதையே, அந்த குடியிருப்பில் இருப்பவர்களும், அருகில் வசிப்பவர்களும் அறிந்து கொண்டனராம். 

இதில் மற்றொரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது ஆனந்த் கைது செய்யப்பட்ட பிறகும்கூட, சித்ராவுடன் சுனிதா தொடர்பிலிருப்பதாகவும், இவர்கள் இருவரும் உறவினர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்களது செயல்பாடுகளை நெருங்கி கவனித்து வரும் தகவல்கள் சந்தேகிக்கின்றன. ஆனால் இது எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com