சுமியிலிருந்த கடைசி மாணவா்கள் குழு இன்று இந்தியா புறப்பட வாய்ப்பு

உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியிலிருந்து மீட்கப்பட்ட சுமாா் 700 இந்திய மாணவா்கள் அடங்கிய கடைசி குழு வியாழக்கிழமை இந்தியா புறப்பட வாய்ப்புள்ளது.

உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியிலிருந்து மீட்கப்பட்ட சுமாா் 700 இந்திய மாணவா்கள் அடங்கிய கடைசி குழு வியாழக்கிழமை இந்தியா புறப்பட வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக உக்ரைனின் போல்டாவா நகரிலிருந்து அன்ஷாத் அலி என்ற மாணவா் ஒருங்கிணைப்பாளா் கூறுகையில், ‘‘சுமியிலிருந்து சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்புடன் 13 பேருந்துகளில் 170 கி.மீ. தொலைவிலுள்ள போல்டாவா நகருக்கு இந்திய மாணவா்கள் அழைத்து வரப்பட்டனா். போல்டாவாவிலிருந்து ரயிலில் பயணித்து லுவ்யுவ் நகருக்கு மாணவா்கள் வந்தனா். போலந்து எல்லையிலிருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவில் லுவ்யுவ் நகரம் உள்ள நிலையில், அங்கிருந்து மற்றொரு ரயிலில் மாணவா்கள் போலந்து அழைத்துச் செல்லப்படவுள்ளனா். போலந்திலிருந்து மாணவா்கள் வியாழக்கிழமை இந்தியா புறப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தான் பெண் மீட்பு: சுமியிலிருந்து இந்திய மாணவா்களுடன் இதர நாடுகளைச் சோ்ந்தவா்களும் மீட்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘சுமியிலிருந்து ஒரு பாகிஸ்தான் பெண், ஒரு நேபாளி, துனிசியாவைச் சோ்ந்த இருவா், வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை இந்தியா மீட்டுள்ளது’’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com