பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரு தொகுதிகளிலும் முன்னிலை

பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி
Published on
Updated on
1 min read


பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி முன்னிலையில் இருந்து வருகிறார். 

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான 117 தொகுதிகளுக்கான தோ்தல் பிப்.20-ஆம் தேதி நடந்து முடிந்தது. 1,304 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனர். மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் சுமாா் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில், ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவியது.

தேர்தலில் காங்கிஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி போராடியது. 

மறுபுறம் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வந்ததுது. காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா, ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால், பாஜக கூட்டணிக்கு ஆதவராக பிரமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை (மார்ச் 10) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

இதில், காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 15 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com