மீிண்டும் முதல்வராகும் யோகி ஆதித்யநாத்: கோராக்பூர் தொகுதியில் வெற்றி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகி வருகின்றன. இதில் 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வரும், பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சபாவதி சுக்லாவைக் காட்டிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோராக்பூர் தொகுதியில் யோகி மொத்தம் 89,332 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com