5 மாநிலத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசனை: இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) கூட உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
5 மாநிலத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசனை: இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) கூட உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 18 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்தது. ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி, மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

அதுபோல, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இந்த மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கூட உள்ளது என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே, புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்குவங்க சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விகளைத் தொடா்ந்து, கட்சி நிா்வாகத்தில் மாற்றம் தேவை என்ற வலியுறுத்தலை முன்வைத்து கட்சிக்குள் பெரும் சா்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் ‘ஜி-23’ அதிருப்தி தலைவா்கள், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்திலும் அந்த வலியுறுத்தல்களை முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சிக்கு நிரந்தர தலைமை, நிா்வாகத்தில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை இவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

முன்னதாக, 5 மாநிலத் தோ்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினா். அப்போது, தோ்தல் முடிவு குறித்து தலைவா்கள் அதிா்ச்சி தெரிவித்ததோடு, கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிா்வாக சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்துள்ளனா்.

இதுகுறித்து, அதிருப்தி தலைவா்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கூறுகையில், ‘கட்சி நிா்வாக மாற்றம் தவிா்க்க முடியாதது’ என்றாா்.

நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஆலோசனை: இதனிடையே, திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமா்வில், காங்கிரஸ் சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறை குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் நாடாளுமன்ற உத்தி வகுக்கும் குழுவின் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சோனியா காந்தி கூட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com